முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற பொங்கல் உற்சவத்தில் 17 நகைத் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய பொங்கல் நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கலில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் சன நெருக்கத்தினை தமக்கு சாதகமாக்கிய திருடர்கள் நகைகள் கைப்பைகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது நேற்றுமாலை வரை 17 நகைத் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் பக்தர்களால் தவறவிடப்பட்ட கைப்பை மற்றும் நகைகள் கண்டெடுக்கப்பட்டு ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.