மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தகர் ஒருர் மீது மிளகாய்ப் பொடி வீசி தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீடு நோக்கிச் சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவரிடமிருந்த சுமார் 45 இலட்சம் ரூபா பணத்தை நபரொருவர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது வர்த்தக நிலையத்தை இன்று திங்கட்கிழமை (09) அதிகாலை மூடிவிட்டு தனது முச்சக்கர வண்டியில் மற்றுமொருவரை ஏற்றிக்கொண்டு சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீகொட சிறிரத்ன மாவத்தையில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவரே இச் செயலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

