உள்ளுர் சந்தையில் எதிர்வரும் வாரங்களில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும்
இலங்கை ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் எரிவாயுவிலைகளும் குறைவடையும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.