வரும் திங்கட்கிழமை (ஜூன் 13 ) அரச துறைக்கான சிறப்பு விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சு, மறுநாள் , ஜூன் 14 ஆம் திகதி ஏற்கனவே பொது விடுமுறை (போயா நாள்) என்று தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்து அமைப்பு மற்றும் அலுவலக செயல்பாடுகளை பராமரித்தல் தொடர்பான பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், ஜூன் 13ஆம் திகதி திங்கட்கிழமை அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.