விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதன்மூலம் 50 ஆயிரம் மில்லியன் ரூபாய் வருவாய் எதிர்ப்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் தனது உரையில்….
சூழல் பாதுகாப்புகாக்காக 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
வனப்பாதுகாப்பக்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யவும், வனஜீவராசிகள் பாதுகாப்புக்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் முன்மொழயப்பட்டுள்ளது.
கிராமிய உட்கட்டமைப்பு, பொது சேவைகளுக்காக 5,300 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், சுதேச மருத்துவத்தை அபிவிருத்தி செய்ய 5,000 மில்லினை ஒதுக்கீடு செய்யவும், விளையாட்டு அபிவிருத்திக்காக 3,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
நடைமுறை சமுர்த்தி செயற்பாடுகளை நவீன மயப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், கிராமிய அபிவிருத்தி இயக்கமாக அதனை மாற்ற எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் காப்புறுதி கூட்டுதாபனத்தின் வணிக ரீதியான அணுகுமுறையை போட்டி நிலைமைக்கு அதனை எடுத்துச் சென்று, சகலருக்கும் பலன் கிடைக்கக் கூடிய வகையில் மாற்றுதல்….
நேரடியான வருமானத்தை ஈட்டுவதற்கு பயன்படாத சொத்துக்களை பயன்படும் வகையில் மாற்றுதல்.
நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை வரைவில் நிறுவி, நாடு முழுவதிலுமுள்ள 10,115 பாடசாலைகளுக்கும் உரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி, அதிவேக இணைய ப்ரோட் பேண்ட் வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை ஏற்படுத்தப்படும். உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டே இது செய்யப்படுகின்றது எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
வீதி அபிவிருத்திக்காக மேலதிகமாக 20,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அனைவருக்கும் குடிநீர் வசதி 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரை வழங்க 15,000 ரூபாய் மில்லியனை ஒதுக்க நடவடிக்கை
திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்க தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க எதிர்பார்க்கின்றோம்.