வட மாகாணத்தில் சினோபாம் 1வது தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (29) வியாழக்கிழமையும் இடம்பெற்றன.
இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் 18,039 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5,110 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7,865 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 9,377 பேருக்கும் ஆக வட மாகாணத்தில் மொத்தமாக 40,391 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.