வடக்கு மாகாணத்தின் புதிய தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்று அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
எல். இளங்கோவனுக்கான நியமனக் கடிதத்தை அரச தலைவர் செயலகத்தில் வைத்து இன்று (12-03-2024) நண்பகல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வழங்கி வைத்துள்ளார்.
கடந்த 2 வருடங்களாக அரச தலைவர் செயலகத்தின் மேலதிக செயலாளராகப் எல்.இளங்கோவன் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 15.03.2024 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, எல். இளங்கோவன் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக நியமனம் பெறும் வரை, வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண தலைமைச் செயலாளராக இதுவரை பணியாற்றிய சமன் பந்துலசேன அரச தலைவரின் விடேச செயலாளராக கொழும்புக்கு மாற்றப்பட்டள்ளார்.
மேலும், வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.