“புரட்சியின் ஆரம்பம்’ என்ற தொனிப்பொருளில் சுமார் ஒரு இலட்சம் இளைஞர்களை கொழும்புக்கு வரவழைத்து அரசாங்கத்திற்கு எதிராக குரலை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக சமகி விஹிதும் ஜனபலவேகய என்ற புதிய இளைஞர் அமைப்பை சமகி ஜனபலவேகய கட்சி ஆரம்பித்துள்ளது.
இந்த அமைப்பிற்காக அனைத்து மாவட்டங்களிலும் 30 வயதிற்கு குறைந்த இளைஞர்கள் 3000 என்ற அளவில் இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கும் முதலாம்கட்ட வேலைத்திட்டம் நேற்று இரத்தினபுரியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து மாவட்டங்களிலுள்ள இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை இரண்டு மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் அணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினராக ஹெஷா வித்தானகே செயற்படவுள்ளார் என தெரியவந்துள்ளது.