பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவர், ஒருவரிடம் 10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை மஹாவெல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு பொலிஸாரே இவ்வாரு கைதாகியுள்ளனர்.
மாத்தளை மஹாவெல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு போக்குவரத்து குற்றத்துக்கான அபராதத் தொகையை குறைப்பதற்காக சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து இலஞ்சம் கோரியதாக கூறப்படுகின்றது.
வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இன்றி வாகனம் செலுத்திய நபருக்கு குறைந்த தொகையில் அபராதப்பத்திரம் வழங்குவதற்காக இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் தன்னிடம் 10,000 ரூபா இலஞ்சம் கேட்டதாக குறித்த நபர் இலஞ்ச ஒழிப்பு திணைக்களத்தில் முறைபாட்டளித்துள்ளார்.
அவரின் முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.