வரும் மார்ச் 31 ஆம் திகதி மகா சங்கத்தினர் அபயராம விகாரையில் ஒன்றுகூடவுள்ளதாகவும், இதன்போது அரசு தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள்மீது தொடர்ந்தும் சுமைகள் திணிக்கப்படுமானால் இந்த அரசுக்கு எதிராக நாமும் வீதியில் இறங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என தாம் வலியுறுத்துவோம் எனவும் அவர் கூறினார்.
எனவே, நாட்டில் ஆட்சி முகாமைத்துவத்தையும், கண்காணிப்பையும் மீண்டும் பொறுப்பேற்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி பதவியில் கோத்தாபய இருக்கட்டும் என தெரிவித்த தேரர், பஸில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு அல்லாமல், பிரிதொரு அபிவிருத்தி அமைச்சு பதவியை வழங்கலாம் எனவும் கூறினார்.