மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் நிதானம் தேவை. பணியிடங்களில் சக ஊழியர்களுடன் இருந்த மனக்கசப்புகள் தீரும். தொழில். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாக பழக வேண்டும். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் அமையும். சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் பொறுமை தேவை. பணத்தை சிக்கனமாக செலவிட வேண்டும். தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிப்பீர்கள், குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது, மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சமூகத்தில் மதிப்பு கூடும். பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பணியிடங்களில் எதிர்பார்த்த பணி மாறுதல்கள் கிடைக்கும். பெரிய இடத்து மனிதர்களின் தொடர்பால் ஆதாயம் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் ஈடுபடுகின்ற காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சிலர் புது வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு பெருகும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். புதிய சிந்தனைகள் பிறக்கும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். வியாபாரங்களில் புது உத்திகளை கடைபிடித்து வெற்றி காண்பீர்கள். தாராளமான பணவரவு இருக்கும்
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் எடுத்த காரியங்கள் எதுவும் வெற்றி பெறாது. சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். உடல் மற்றும் மனதளவில் சோர்வு இருக்கும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கவும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் நன்மைகள் ஏற்படும். உங்களின் திறமையால் பலரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். கொடுத்த கடன் திரும்ப வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு பெறுவீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்ததெல்லாம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலர் வெளிநாடுகள் சென்று வர வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் தங்களின் உழைப்பால் முன்னேறுவார்கள். நேரடி, மறைமுக எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்படும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும் பணவரவுகளில் இழுபறி நிலை இருக்கும்.
மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். சிலர் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உருவாகும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. அரசு ரீதியான காரியங்களில் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.