மேஷம்:
மேஷத்தில் பிறந்த நீங்கள் இன்று உங்களின் கருத்துகளை தயங்காமல் முன்னிறுத்துவது நல்லது. குடும்ப உறவில் அனுசரித்து செய்வது நன்மை தரும். சுய தொழிலில் புதிய முதலீடு செய்வதில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்த நீங்கள் இன்று செய்யும் செயலில் உன்னிப்பாக கவனித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தடைபட்டு கொண்டிருந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழிலில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை இழக்க நேரிடலாம் கவனம் வேண்டும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்த நீங்கள் இன்று இருக்கின்ற முயற்சிகளில் எல்லாம் அமோகமான நற்பலன்களை காண இருக்கிறீர்கள். குடும்பத்தில் உங்களுடைய கருத்துகளுக்கு மற்றவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். சுய தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியவர்கள் அறிமுகமாவார்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்த நீங்கள் இன்று புத்துணர்வுடன் இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பல தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோக பூர்வ முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் வேண்டாம். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்த நீங்கள் இன்று தேவையற்ற விஷயத்தில் தலையிட வேண்டாம். வீண் வழக்குகள் வரலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு வேகம் இருக்கும். வாகன பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பல அரிய நிகழ்வுகள் நடக்கலாம்.
கன்னி:
கன்னியில் பிறந்த நீங்கள் இன்று காலை முதலே நல்ல செய்திகளை பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். சுய தொழிலில் முன்னேற்றம் உண்டாக புதிய அம்சங்களை கடைப்பிடிப்பீர்கள். உத்தியோக விஷயத்தில் கூடுதல் பொறுப்புடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய முன்னேற்றம் ஏற்ற இறக்கத்தில் இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்த நீங்கள் இன்று எடுத்த எடுப்பிலேயே எவரையும் எடை போட வேண்டாம். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுக்குள் இருந்த தீரா சிக்கல் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் தீர விசாரிக்காமல் முடிவு எடுப்பது நல்லதல்ல. உத்தியோக உயர்வு பெற எடுத்த முயற்சிகள் சாதக பலன் தரும். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்த நீங்கள் இன்று சுய முடிவு எடுப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை பெறுவதில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தீடீர் அதிர்ஷ்டம் வரக்கூடும்.
தனுசு:
தனுசில் பிறந்த நீங்கள் இன்று புதிய சாதனைகளை படைக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுகவீனம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்த நீங்கள் இன்று எடுக்கக்கூடிய முக்கிய முயற்சிகளில் கால தாமதமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தேவையற்ற முன்பின் தெரியாதவர்களின் பேச்சுகளை நம்பி ஏமாற வேண்டாம். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்த நீங்கள் இன்று மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடப்பதில் இடையூறுகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகிரகம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்த நீங்கள் இன்று எதிர்பாராத நபரை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பழிகள் விழக்கூடும் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.