மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில்சகா ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொந்த தொழிலில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு பணிகளில் கவனம் தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் தன லாபமும் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். சிலருக்கு ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பிற்பகல் வரை வழக்கமான பணிகளை கவனத்துடன் மேற்கொள்ளவும். உங்களின் பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும், லாபமும் இருக்கும். நண்பர்களின் சந்திப்பும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமானதாக அமையும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகக் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.
விருச்சிகம்:
விருச்சிக்க ராசிக்காரர்களுக்கு மகான்களின், தரிசனமும்ஆசிகளும் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும், ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சிலர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். தொழில், வியாபாரங்களில் சிறப்பான நிலை இருக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புதிய ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மனதில் உற்சாகம் நிலவும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் உடல் நலம் பாதிக்கப்படும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும். பெண்கள் வழியில் தன லாபம் ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். சிலருக்கு உடலாரோக்கியம் பாதிக்கப்படும். பணம் தொடர்பான விடயங்களில் கவனம் தேவ. சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாகச் செயல்படுவீர்கள். பணியிடங்களில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.