மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே கூடுதல் அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் நடக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை ஏற்பட்டிருந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இழுப்படியாக இருந்த வேலைகள் சுலபமாக முடிவுக்கு வரும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே ஏற்பட்டு கொண்டிருந்த மன உளைச்சல் தீரும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும் என்பதால் புதிய முதலீடுகளை துவங்கலாம். உத்தியோகத்தில் மன நிம்மதி இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு மன நிறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிலும் பொறுமை காத்து அடைய கூடும். அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த கருத்து மோதல் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய பிடிவாத குணத்தை தளர்த்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண அலைச்சல் ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வரக்கூடிய வருமானத்தை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த சிறு சிறு மன கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறை பலமுறை சிந்தித்து பின்னர் முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார சிறப்பாக இருக்கப் போகிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் வாக்குவாதங்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் தவிர்ப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள அனுகூலமான பலன்கள் கிடைக்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்டு கொண்டிருந்த பனிப்போர் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு துறை சார்ந்த பிரச்சினைகளை பெரிய மனிதர்களிடம் கேட்டு தெளிவு பெறுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு ஆதரவாக செயல்படுவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் சுபகாரிய தடைகள் விலகி குதூகலம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய தைரியம் பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேர் வழியை நாடுவது நல்லது, குறுக்கு வழியில் சென்றால் தேவையில்லாத வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடினமான வேலையும் சுலபமாக முடியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவை விட செலவுகள் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய நபர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே பகைகளை வளர்த்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சாமர்த்தியமான பேச்சாற்றலால் எதையும் உங்கள் வசத்தில் இழுத்துக் கொள்ளலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையை கையாளுவது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்க வேண்டும். தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்ய வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளிக்கலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை நேர்மறையாக சிந்திக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் அக்கறை தேவை. அலட்சியம் இழப்புகளை உண்டாக்கும். வெளியில பயணங்களில் கவனம் தேவை. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடல் ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.