மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூக சிந்தனை அதிகரித்து காணக்கூடும். குடும்ப உறவுகளுக்கு இடையே விரும்பிய விஷயங்களை வாங்கி மகிழ்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபிக்க கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாதீர்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சின்ன சின்ன கவலைகள் தோன்றி மறையும். மனதிற்குள் எதையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை விமர்சிக்கும் முன்பு யோசிப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. எதிர்பாராத பணவரவு இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எண்ணியது ஈடேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மதிப்பு உயரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சமுதாய அந்தஸ்து பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பாதைகள் தென்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுக்கள் பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறவுகளுக்குள் நெருக்கம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சில நெளிவு, சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கும். குடும்ப விவகாரங்களில் நிதானத்தை கையாளுவது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே நட்பு வளரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைகளை தாண்டிய வெற்றி உண்டாகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உற்றார், உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். செய் தொழிலில் பொறுப்புடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் காணலாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிரியமானவர்களுடன் செலவிடக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொலைதூர இடங்களில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் சமயோகித புத்தியுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுடைய கை ஓங்கி காணப்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீட்டிய திட்டங்கள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சில விஷயங்களை புதுப்பிக்க வாய்ப்புகள் உண்டு. வியாபார விருத்திக்கு புதிய யுக்திகளை கையாளலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களின் ஒத்துழைப்பை நாடுவது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். மற்றவர்களுடன் போட்டியிட்டு உங்களுடைய திறமைகளை நிரூபிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் அனாவசிய விமர்சனங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இலக்குகளை நோக்கிய பயணம் முன்னேற்றம் காணக்கூடிய வகையில் அமைந்துள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்புகள் குறையும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதையும் பெரிதாக யோசிக்காமல் விட்டு விடுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். சுய தொழிலில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி இருக்கும்.