மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து நீங்கும். சுய தொழிலில் லாபம் அதிகம் காண புதிய முயற்சிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக அமையப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சந்திக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் நன்மைகள் நடக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தகாத நண்பர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத இழப்பை சந்திக்கலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்கள் பணி சார்ந்த ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பு இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேடிய ஒரு விஷயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த சண்டைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புணர்வு தேவை
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நட்பு வட்டம் வளரக்கூடிய வாய்ப்பு உண்டு. எதிர்பாராத திருப்பங்கள் வரலாம். குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் முன் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்காத பணவரவு காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகள் மூலம் சில தொந்தரவுகளை சந்திக்கலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உள்ளம் நெகிழும் படியான நிகழ்வுகள் நடக்கவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத பயணங்களில் மூலம் பலன்களை பெற வாய்ப்பு உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நல்ல நாளாக அமையப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே பேச்சுவார்த்தையில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமைக்கு ஏற்ப பலன்கள் பெறுவீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் மூலம் நன்மைகள் நடக்கும்.