மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத சில விஷயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. எடுத்த முடிவுகளில் இருந்து குழப்பங்கள் வரக்கூடும். சுய தொழிலில் லாபம் காண புது உத்வேகம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மன இறுக்கத்தில் இருக்க வாய்ப்பு உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்ச்சி நிறைந்த நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்களில் தொட்டதெல்லாம் ஜெயமாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் இருந்தாலும் பயணங்கள் மூலம் அனுகூல பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு படபடப்பு இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சிந்தனைகள் வளரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் நீங்கள் திருப்தியான லாபம் காண புதிய முதலீடுகளை திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செலவுகளை திட்டமிடுவது நல்லது. அனாவசிய ஆடம்பரங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தீராத வியாதிகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடமையை சரியாக செய்யுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் முனைப்புடன் ஈடுபடக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே பேச்சில் இனிமையை கடைப்பிடியுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் நினைத்ததை நிறைவேற்றி காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய பகைவர்கள் தொல்லை தீரும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேற கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்க்கவும். சுய தொழிலில் நெருங்கியவர்களின் உதவிகளை புறக்கணிக்காதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வைராக்கியத்துடன் இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எடுத்த முடிவிலிருந்து பின் வாங்க வேண்டாம். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் அகலும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதுமைகளை படைப்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நயமான பேச்சினால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் வீண் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் நலத்தில் கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பொருட்கள் வாங்க கூடிய யோகம் உண்டு. வாகன ரீதியான வீண் விரயங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாள் செய்ய நினைத்து தள்ளிக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை செய்து காட்டுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமோகமான நல்ல நாளாக இருக்கப் போகிறது. இறை வழிபாடுகளில் கூடுதல் கவனத்தை செலுத்துவீர்கள். குடும்பத்தில் சகோதர வகையில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழிலில் இரட்டிப்பு லாபம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்பு குறைவு என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழாமல் இருக்க அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசி வாங்கி கட்டிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாதீர்கள். சுப காரியங்களில் இழுப்பறி நிலவலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் பலிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள்.