மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் பெருகும் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த புகழ் உங்களை வந்தடையும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குழப்பங்கள் தீர்ந்து சுய முடிவு எடுக்கக்கூடிய துணிச்சல் பிறக்கும். ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமையை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் திக்கு முக்காட செய்யும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் உள்ளவர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இரக்க சுபாவத்தினால் நன்மை தரக்கூடிய அமைப்பாக உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பல எதிர்ப்புகள் தோன்றும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து செல்லும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சி திருவினையாக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் கவலையை மறப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆர்வத்திற்கு அளவே இருக்காது. பல விஷயங்களை கற்றுக் கொள்வதென முனைப்புடன் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் உத்வேகத்துடன் செயல்படுவது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும் இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். பெரிய மனிதர்களுடைய சந்திப்பு அனுகூல பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆக்கத்துடன் செயல்படுவீர்கள். உங்களுடைய பொறுமையை சீராக கடைபிடிப்பது நல்லது. எந்த காரணத்தை கொண்டும் உங்களுடைய சுயத்தை இழந்து விட வேண்டாம். சிலர் உங்களை சீண்டிப் பார்க்க முயற்சி செய்வார்கள். சுய தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடையக் கூடிய வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும். புதிய இடங்களுக்கு பிரயாணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்த நற்செயல்களுக்கான பாராட்டுகளை பெரும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முயற்சியில் திடீர் லாபம் கொடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பல விமர்சனங்களை தாண்டிய தன்னம்பிக்கையை பெற இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் உங்களுடைய திறமையையும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வது உத்தமம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானத்தை இழந்து விடாமல் இருப்பது நல்லது. உங்களுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு உரிய செலவுகளும் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களிடம் திணிக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். கணவன் மனைவிக்கு இடையே பேச்சுவார்த்தையில் இனிமை தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவம் உங்களுக்கு பெரிய பாடமாக அமையப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வருவதற்கு காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து நன்மைகள் நடக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் தேவை.