உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் படைகளின் தாக்குதல்களில் 9,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு சொந்தமான 30 விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 டாங்கிகள், 90 சிறிய பீரங்கிகள் மற்றும் 900 வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
42 ராணுவ வாகனங்கள், 374 கார்கள், 60 எரிபொருள் தொட்டிகள், 3 ஆளில்லா விமானங்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஒரே நேரத்தில் செலுத்தும் திறன் கொண்ட 11 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை ரஷ்யா இழந்துள்ளதாக கூறப்படுகிறது.