ரயிலின் மிதிபலகையில் நின்று பயணித்த நபர் ஒளி சமிக்ஞை கம்பத்துடன் மோதி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதானையில் இருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்தின் மிதிபலகையில் நின்று பயணித்தபோதே வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை பகுதியில் உள்ள ஒளி சமிக்ஞை கம்பத்துடன் மோதியே நபர் விபத்துக்களானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒளி சமிக்ஞை கம்பத்துடன் மோதிய நபர் சுமார் 30 மீற்றர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.