நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இன்று செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து மேற்கண்டவாறு அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்வாறான கூட்டணியின் மூலமே நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.