ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவிப்பாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஜனாதிபதி கூறிய பதில் புத்தாண்டு விழாவில் இருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.
நுவரெலியா மீபிலிமனேயில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதியின் அருகில் சென்ற அறிவிப்பாளர் “எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு உடனடியாக பதில் அளித்த ஜனாதிபதி, “ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து நான் அழகாகிவிட்டேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
ஜனாதிபதியிடம் அறிவிப்பாளர் கேட்ட கேள்வியும் அதற்கு கிடைத்த பதில்களும் ஒலிபெருக்கி மூலம் அரங்கம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் சிரிக்க வைத்தது.
இதேவேளை, சுற்றுலா காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதியுடன் மீபிலிமனேயில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழாவை பார்வையிடச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.