யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் இன்று மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. ரேவடிக் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி, மாவீரர் தினமாக தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் மாவிரர் தினம் ஈழத்தமிழர்களால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.