தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சுமந்திரன் நேற்று காலை சந்தித்தார்.
இதன்போது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுமந்திரன்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் (PTA) முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறினார். அத்துடன் சந்திப்பின்போது உத்தேச திருத்தங்களில் புதிதாக எதுவும் இல்லை என வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதில் தாமதம் செய்வது குறித்தும் அமைச்சரிகளிடம் தாம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறினார்
அதேவேளை வடக்கில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்க விரும்புவதாக கடந்த வருடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்க ஜனாதிபதி ஆர்வமாக இருப்பதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் , தன்னிடம் தெரிவித்ததாகவும்க் சுமந்திரன் மேலும் கூறினார்.