யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட 5 சந்தேகநபர் இன்றையதினம் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி வன்முறை கும்பல் ஒன்றினால் பொன்னாலை கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்தில் வைத்து குறித்த இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, 5 வது கொலைச் சந்தேகநபருக்கான அடையாள அணிவகுப்பு இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் 5வது சந்தேகநபரை, உயிரிழந்தவரது மனைவி மன்றில் தோன்றி அடையாளம் காட்டியுள்ளார்.
அந்தவகையில் அவரையும், கைது செய்யப்பட்ட எனைனோருடன் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.