முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி அவர் யாழிற்கு விஜயம் செல்லவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாக மைத்திரி யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பின் அங்கஜனின் தலைமையிலான குறித்த மாநாடு நெல்லியடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த கூட்டத்தில் , கட்சியின் பிரமுகர்கள் பலர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.