யாழில் 800 ரூபா கடனை திருப்பி செலுத்தவில்லை என இளம் குடும்பஸ்தர் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,
800 ரூபா கடன் பணத்தைக் கேட்டு இளம் குடும்பத் தலைவர் மீது இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலால், அடி காயங்களுடன் யாழ் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம்(16) சனிக்கிழமை உயிரிழந்தார்.
சம்பவத்தில் உரும்பிராய் கிழக்கு, வளர்பிறை சனசமூக நிலையயத்தடியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சிங்கரத்தினம் சிவாஸ்குமார் (40) என்ற இ.போ.ச பஸ் ஓட்டுனரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஊரெழு மேற்கில் அமைந்துள்ள வீடொன்றுக்கு சென்று திரும்பியபோது அங்கு வந்த இளைஞன் ஒருவன், தனக்கு வழங்க வேண்டிய 800 ரூபா கடன் பணத்தை கேட்டு சிவாஸ்கரன் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவரை தானே அழைத்து வந்து சிவாஸ்கரனின் வீட்டில் சேர்த்து விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அடிகாயங்களுக்கு இலக்காகி உடல்நிலை மோசமடைந்திருந்த சிவாஸ்குமாரை மறுநாள் திங்கட்கிழமை மாலை வேலையில் வீட்டார் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்ததாக தெரியவருகின்றது.
இந்நிலையில் கடந்த ஆறு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.
குடுமபஸ்தரின் உயிரிழப்பை அடுத்து தாக்குதல் நடத்திய இளைஞன் கோப்பாய் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துளதாக கூறப்படும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.