யாழ்.பருத்தித்துறை – புலோலி பகுதியில் வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது பட்டா வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று புலோலி – சாரையடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செபஸ்ரியன் பாலேந்திரன் (வயது-82) என்பவரே உயிரிழந்துள்ளார்.