யாழில் கடந்த வாரம் லண்டன் வாழ் மாப்பிள்ளைக்கும் யாழ்ப்பாண யுவதிக்கும் வெகு சிறப்பாக நடந்த திருமணம் ஒன்று விவாகரத்து நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
திருமண நாளன்று சமூகவலைத்தளங்கள் தொடர்பில் மணமக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே விவாகரத்துவரை செல்ல காரணம் என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் தீவகப்பகுதியைச் சேர்ந்த லண்டனில் நிரந்தர குடியுரிமையுள்ள 36 வயதான மணமகனுக்கும், யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 27 வயது யுவதிக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமணத்திற்கு மாப்பிளை மற்றும் அவரது உறவினர்கள் தாயகம் வந்த நிலையில் யாழில் வீடு ஒன்றினை பெற்று தங்கியிருந்த நிலையில், திருமண நாளன்று இரவு அங்கு வைத்து மாப்பிள்ளை புதுபெண்ணை தாக்கியதாக தெரியவருகின்றது.
தகவலறித்து காலையில் அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள் புதுமணப்பெண் தாக்கப்பட்டமையை கண்டு வெகுண்டுழுந்ததால் முதல்நாள் கலியாண வீடாக காட்சியளித்த வீடு ரணகளமானது.
புதுமணப்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்னர் காதலன் இருந்துள்ளதாக மாப்பிள்ளைக்கு எழுந்த சந்தேகமே சண்டைக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.
திருமணத்துக்கு முன்னர் யுவதிக்கு முகநூல் கணக்கு இருந்த நிலையில் நிச்சயதார்த்தம் முடிவடைந்த பின்னர் லண்டன் மாப்பிள்ளையுடன் யுவதி உரையாடி வந்துள்ளார்.
எனினும் திருமணத்திற்கு முதல்நாள் தனது பேஸ்புக் கணக்கை யுவதி அழித்ததுடன் தொலைபேசி இலக்கத்தையும் டிஅக்ரிவேட் செய்த பின்னரே திருமணம் முடித்துள்ளார்.
இது தொடபில் நடந்த வாக்குவாதமே தாக்குதல் நடாத்துவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார் யுவதியை தம்முடை அழைத்து சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிசிலும் முறையிட்ட நிலையில் புது மப்பிள்ளையை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போதே மேற்கண்டவாறு மாப்பிள்ளை கூறியுள்ளார் அதேவேளை யுவதி வழங்கிய வாக்குமூலத்தில் , தனது தங்கையின் முகநூலையே தான் பாவித்ததாகவும், அது தொடர்பில் தான் ஏற்கனவே மாப்பிள்ளையிடன் கூறியதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் சமாதானமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் , அதுவரை பொலிசாரின் மேலதிக நடவடிக்கையை நிறுத்துமாறும் பொலிஸாரிடம் கேட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.