யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மாணவர்களுக்கு இராஜேஸ்வரி அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளரும் இராஜேஸ்வரி திருமண மண்டபம் மற்றும் இன்னும் பல வணிக துறைகளில் தடம்பதித்தவருமான செல்லத்துரை திருமாறன் பல உதவிகளை செய்துள்ளார்.
நேற்றைய தினம் (02-02-2024) செல்லத்துரை திருமாறனின் 49 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு பல உதவிகளை வழங்கியுள்ளார்.
மேலும் இவர் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களின் தேவைகளைத் தேடி அறிந்து பல சேவைகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்கையில், யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் வறிய சிறுவர்களுக்காக ஒரு இலட்சம் பெறுமதியான இன்சுலின் ஊசி மருந்தினை யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் டாக்டர் யமுனாநந்தாவிடம் கையளித்திருந்தார்.
மேலும், யாழில் சில பிரதேசங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன், துவிச்சக்கர வண்டியும் இராஜேஸ்வரி மண்டபத்தில் வைத்து வழங்கியிருந்தார்.
அன்புச்சோலையில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன் ஒரு தொகை மூக்குக்கண்ணாடிகளையும் நேற்றைய தினம் கையளித்திருந்தார்.
செல்லத்துரை திருமாறன் ஈழத்தில் பிறந்து தனது சொந்த முயற்சியில் தன்னுடைய சிந்தனை மற்றும் உழைப்பால் உயர்ந்ததுடன், தனது மக்களுக்காகப் பல சமூகப்பணிகளை தொட்சியாக முன்னெடுத்து வருகின்றமை பாராட்டுக்குரியதாகும்.