யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் தனியார் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து இரவு 1 மணியின் பின்னர் நீச்சல் தடாகத்தில் நீராட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் நபர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் சடலமாக கிடந்ததை அவதானித்து யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவித்திருந்தனர்.
அதேவேளை உயிரிழந்தவருடன் மேலும் பலர் நீராடி இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் கொலையா அல்லது இயற்கை இறப்பா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்