யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தனித்திருந்த 10 வயதுச் சிறுமியை 60 வயது முதியவர் ஒருவர் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் மருதங்கேணி பகுதியில் நேற்றைய தினம் (23-10-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
இதன்போது அவரது வீட்டுக்கு பின் வீட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர் குறித்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய நிலையில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து சந்தேக நபரான குறித்த முதியவர் தலைமறைவாகியுள்ளார்.
[IH7Y8BD ]
இவ்வாறான நிலையில் மருதங்கேணி பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.