யாழ்.கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் பற்றைக்காடு ஒன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 25 ஜெலக்நைட் குச்சிகளை நேற்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக அவை மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் அவை மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக அவை கடற்படை முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.