யாழ்- அச்சுவேலி – புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று (12.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையடித்த சில பொருட்களும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த வாளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் அச்சுவேலி பொலிஸாரும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேக நபர்களை இன்றைய தினம் (13.12.2023) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த (10.12.2023) ஆம் திகதி புத்தூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு சிசிடிவி கமரா, தொலைக்காட்சி பெட்டி, சிகரெட் பெட்டிகள், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.