யாழில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக புதைக்கப்பட்ட நிலையில் மருதங்கேணி பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 11-ம் திகதி மருதங்கேணி பொலிஸாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் இடம்பெற்றுள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், சட்டத்தரணி ஒருவருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவர் நேற்றுமுன்தினம் (13-05-2022) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றது என கைதானவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேலும் இவ்வாறு சரணடைந்தவர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தம்பி எனவும் தெரிவித்திருக்கின்றனர்.