யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.