யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வெற்றிலைக்கேணி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலை மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கடற்படையினர் சோதனையிட்டனர்.
இதன்போது தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை வைத்திருந்த மீனவர்களிடம் இருந்து வலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் .
கட்டைக்காட்டில் பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் இடம்பெறுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து கடற்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சுருக்கு வலை அகப்படவில்லை எனவும், அதிகளவு தங்கூசிவலைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் , கைப்பற்றப்பட்ட வலைகளை அழிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .