யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ள அசரால் காலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் தான் இந்த மந்திரி மனை.
குறித்த மந்திரி மனை இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் தான் இது.
இந்த கட்டிடத்தை யாழ் இந்து மகளிர் கல்லூரி படித்த பெண்ணொருவர் நிஜத்தில் உள்ளது போல அப்படியே ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.
புகைப்படத்தை முகநூலில் பார்த்த இணையவாசிகள் குறித்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.