இலங்கையில் இன்று பேசப்பட்டுவருவர்தான் முன்னாள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தேயின் மகன் இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த.
முன்னாள் பிரதமர் சிறிமாவின் மருமகன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மைத்துனர் அவர்.
முன்னாள் தலதா மாளிகையின் தியவதன நிலமே மற்றும் மாவன்னல தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் லெக்கே ரத்வத்தேயின் பேரன்.
2001ஆம் ஆண்டு கண்டி உடதலவின்ன பகுதியில் 10 முஸ்லீம் இளைஞர்கள் படுகொலை சம்பவத்துடன் கைது செய்யப்பட்டு நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானவர்.
தற்போதைய அரசில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர்களான இருந்தவர்.
அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாரென குற்றஞ்சாட்டப்பட்டு இன்று பதவி விலகியவர்.