களுத்துறை ஹொரண பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு மாறும் சந்திக்கு அருகில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளும் ஜீப் வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளந்தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரணை, வடக்கு உடுவையில் வசித்து வந்த கே. ஜி. கிஹிம்ஹானி என்ற 26 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் ஆவார்.
உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் மூன்று வயது மகளுடன் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
ஹொரணை, வடக்கு உடுவ பகுதியில் இருந்து இரத்தினபுரி வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு முன்பாக வீதியின் மத்திய கோட்டில் நிறுத்தி வலப்புறம் திரும்ப தயாராக உள்ளது.
இதன் போது, ஹொரணையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பொருட்களை விநியோகிக்கச் சென்ற பொலேரோ ஜீப் ஸ்கூட்டரின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.