நாட்டில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலும் இரு பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
லங்கா சதொச நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 320 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளையரிசி ஒரு கிலோ கிராமின் விலையை சதொச நிறுவனம் 4 ரூபாவினால் குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசியின் புதிய விலை 185 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.