மெதகம உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவரால் நடத்தப்பட்டதாக கூறப்படும் பாரியளவிலான சூதாட்ட நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு, ஒரு தொகை பணத்துடன் 8 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மூடிய கராஜ் ஒன்றில் மதுபோதையில் பணத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தோற்கடிக்கப்பட்டவர்களின் கார்கள்
இதன்போது கைதுசெய்யப்பட்ட மெதகம உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உட்பட மொனராகலை, நக்கல, புத்தல ஆகிய பகுதிகளில் வசிக்கும் சந்தேக நபர்களிடமிருந்து 40,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூதாட்ட நிலையத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் கார்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் அடகு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.