இலங்கையில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதன்படி, பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.