மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் சற்றுமுன்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால் கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
எதிர்வரும் 2 வாரங்களில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது.
ஜனவரி மாத நடுப்பகுதியிலும், எரிபொருளை ஏற்றிக் கொண்டு மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.