ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவா்களுக்கான புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ தெரிவித்திருப்பதாவது:
அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவா்களுக்காக விவாகரத்து, வாரிசுரிமை, குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட குடும்ப விவகாரங்களைக் கையாளும் புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக புதிய நீதிமன்றமும் உருவாக்கப்படும். அமீரகத்தில் அதிகமாக வாழும் வெளிநாட்டவா்கள் எளிதாக புரிந்துகொள்ளும் அரபி மற்றும் ஆங்கில மொழிகள் இந்த நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத்துக்கு அங்குள்ள இந்திய சமூகத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.