முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயற்பாடு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
காணிப் பகுதியில் கொடுக்கப்படும் ஆவணங்கள் அடிக்கடி காணாமல் போவதாக கூறி மீண்டும் ஆவணங்களை பெற்று வருமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் காணிப்பகுதி உத்தியோகத்தர்களின் அக்கறையற்ற செயல்பாட்டினால் இது நிகழ்கின்றதா அல்லது அவர்கள் வேண்டுமென்றே ஆவணங்களை காணாமல் செய்து விட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகின்றனரா என கேள்வியெழுப்பும் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு.
முத்தையன்கட்டைச் சேர்ந்த ஒருவர் காணி ஆவணம் ஒன்றில் பெயர் மாற்றத்தை செய்வதற்காக காணிப்பகுதியினரால் கோரப்பட்ட ஆவணங்களை வழங்கியிருந்தார்.
பத்தாண்டுகளாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு இது தொடர்பில் சென்று வரும் பாதிக்கப்பட்ட அந்த நபர் மூன்று தடவைக்கும் மேலாக ஆவணங்களை காணவில்லை என்றும் மீண்டும் கொண்டு வந்து தருமாறும் சொல்லப்படவே அவ்வாறே மீண்டும் ஆவணங்களை தயார் செய்து கொண்டு சென்றுள்ளார்.
பரம்பரையாக ஆட்சியில் இருப்பதும் பராமரித்து வருவதுமான ஒரு காணியின் ஆவணங்களில் உரிமை மாற்றத்தினை உறுதி செய்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே அவரது கோரிக்கை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சியில் ஈடுபட ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை அவர்களது கிரமத்திற்கு நான்கு கிராம் சேவகர்கள் இடமாற்றலாகி கடமை நிமித்தம் வந்து சென்றுள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
தண்டுவான் என்ற கிராமத்தில் உள்ள காணியாளர் ஒருவர் தனது காணியின் உறுதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
எனினும், பின்னர் வருமாறு கூறி அனுப்பி வைத்த ஒட்டுசுட்டான் காணிப்பகுதி அதிகாரிகள் மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை.
இந்த நபரொடு ஆவணங்களை கொடுத்த பலருக்கு காணி கச்சேரிக்கு அழைப்பு வந்து உறுதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்த போதும் இவருக்கு அது சாத்தியமாகவில்லை.
கிராம சேவகரூடாக காணிப்பகுதியில் கேட்டதற்கு ஆவணங்கள் காணாமல் போய்விட்டது.மீண்டும் கொண்டுவந்து தருமாறு கூறியுள்ளனர்.
தாத்தா தனது காணியினை பேத்திக்கு மாற்றிக் கொடுப்பதற்கான ஆவணங்களை கொடுத்திருந்தார்.ஆனாலும் அவை காணாமலாக்கப்படவே மீண்டும் புதிய ஆவணங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். தாத்தா இறந்து விட்ட சூழலில் புதிதாக ஆவணங்களை தயார் செய்வதற்காக தாத்தாவின் பிள்ளைகள் எல்லோரிடமும் ஒப்புதல் பெற்ற ஆவணத்தையும் பெற வேண்டியிருந்தது என பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டிருந்தார்.
பாரம்பரை பரம்பரையாக ஆட்சியில் உள்ள ஒரு காணியினை உறவுமுறை மாற்றலுக்காக உரிய ஆவணங்களை வழங்கிய போதும் பெயர் மாற்றலாகிய ஆவணங்களை வழங்குவதில் இத்தனை இழுபறிகளும் அலைக்கழிப்புக்களும் உள்ள போது இதற்கான இலகுவான முயற்சிப்புக்களுக்கு நடவடிக்கைகளை ஏன் பிரதேச செயலாளரினால் மேற்கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் அக்கறையற்ற அலுவலக முறையை பேணிக் கொள்கின்றனர் என்று சொல்லும் நிலைக்கு அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றன.
காணி ஆவணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழும் மக்களிடையே அத்தகைய ஆவணங்களடங்கிய அவர்கள் வழங்கிய கோவைகளை சாதாரணமாக காணாமல் போய்விடுகின்றன என்று பதிலளிப்பது எத்தகைய பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டுவதாக அமையும் என சமூகவிடய கற்றலாளருடன் இது பற்றிக் கேட்ட போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதேச செயலகம் ஒன்றில் மக்களிடமிருந்து பெறப்படும் ஆவணங்களை கவனமாக பாதுகாக்க வேண்டும் என்ற நடைமுறை இல்லை போலும்.ஆவணங்களடங்கிய கோவையினை பெற்றுக்கொள்ளும் போது அதனை பெற்றுக்கொண்டதற்கான பதிவுகள் என தனிப்பதிவுகளை அவர்கள் பேணிக்கொள்ள முயற்சிப்பதாக தெரியவில்லை.
அவ்வாறு முயற்சித்திருந்தால் பதிவுகளை மீளவும் விரைவாக பார்வையிட ஆவணங்களை வழங்கியவருக்கு பதிவுக்கான குறிப்புக்களை கொண்ட குறிப்புத் துண்டினை வழங்கியிருக்க வேண்டும்.
அப்படி வழங்கும் போது அந்த ஆவணம் காணாமலாக்கப்பட்டால் தாமே தான் பொறுப்பாளிகள் என்ற உணர்வுடன் அவர்கள் செயற்படுவதாக இல்லை.இது பொறுப்பற்ற மோசமான செயலென சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.இவர் காணிப் பகுதியில் ஆவணங்களை காணவில்லை என சொல்லப்பட்ட நிகழ்வொன்றுடன் தொடர்புபட்டு பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
பலருக்கு ஆவணங்களை கவனமாக வைத்து வேலைகள் முடித்துக் கொடுக்கப்படும் போது சிலரது ஆவணங்கள் மட்டும் காணாமல் போய்விட்டது என்று சொல்வது எப்படி எனத் தெரியவில்லை என்று அவர் மேலும் தனது சந்தேகத்தி%E