முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கும் ஒட்டுசுட்டானுக்கும் இடைப்பட்ட மேளீவனம் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றவர்களால் குறித்த யானை அடையாளங் காணப்பட்ட நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த யானையின் ஒருகாலில் காயம் காணப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இறந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் இன்று (17) மேற்கொள்ளப்படும் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்