பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 5 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு பலாங்கொடை பதில் நீதிவான் ஏ. எம். எஸ். மெனிகே உத்தரவிட்டார்.
4 வெள்ளை முட்டைகளை 260 ரூபாவுக்கு விற்பனை செய்தமைக்காகவே இந்த வர்த்தக நிலையத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு முட்டைக்கு 65 ரூபா வீதம் உன்ற அடிப்படையில் நான்கு முட்டைகளை 260 ரூபாவுக்கு குறித்த வர்த்தகர் விற்பனை செய்ததாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.