முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமகுமார் குணரத்னம் உட்பட பதினான்கு பேரை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருகின்றதாக கூறப்படுகின்றது.
காலிமுகத் திடல் போராட்டத்தை வன்முறைக்கு இட்டுச் சென்றதாகக் கூறி, அவர்களை கைது செய்யுமாறு பொலிஸார், சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு பங்களிப்புச் செய்யும் அரசியல் கட்சிகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.