மீன் வியாபாரியிடம் கைநீட்டி லஞ்சம் வாங்கிய கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தொடர்பில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளது.
நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் நல்லூர் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி மீன் வியாபாரி ஒருவர் மீன் வியாபாரம் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வியாபாரியை அச்சுறுத்திய கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் சிலர் லஞ்சம் வாங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீன் வியாபாரி தனது பகுதி கிராம அலுவலகர் ஊடாக நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக கையூட்டுப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை மீன் வியாபாரி அடையாளம் காட்டியுள்ளார்.
மேற்கொண்டு விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றன.